முகப்பு விக்கிரவாண்டி விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகில் வாரச்சந்தை – மக்கள் மகிழ்ச்சி

விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகில் வாரச்சந்தை – மக்கள் மகிழ்ச்சி

99 ஆண்டுகள் குத்தகை வேண்டி விண்ணப்பம்

by Tindivanam News
vikravandi weekly market at railway station

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், ரயில் நிலையம் அருகே வாரச் சந்தை அமைப்பது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை இளநிலை உதவியாளர் அவர்கள் வரவேற்றார். பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் எம். அப்துல் சலாம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் வாரச்சந்தை அமைக்க காலியாக உள்ள பகுதியில் 99 ஆண்டுகள் குத்தகை கோரி ரயில்வே துறைக்கு விண்ணப்பம் அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர், மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  விக்கிரவாண்டி டோல்கேட்டை 35 ஆயிரம் வாகனங்கள் கடந்தன

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole