கீழ்பெரும்பாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவர் ரயில்வே துறையில் ஃபிட்டராக பணி செய்து வருகிறார். ஜம்புலிங்கம் பணி காரணமாக திருச்சியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவரது வீட்டில் மனைவி கீதாவுடன் அவரது மகன் மற்றும் மகள் மட்டும் தனியே இருந்துள்ளனர். காலை 6 மணியளவில் கீதா எழுந்து பார்த்தபொழுது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பூஜை அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, முப்பது சவரன் நகைகள் திருடப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவேற்கப்பட்டு தடயங்கள் ஆராயப்பட்டது. சமீபகாலமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.