விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி மீனாட்சி 35. இவர் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தூய்மைப் பணியாளராக பணி செய்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி உணவகத்தில் மின்சார அலங்கார விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது. அந்த பணியின் போது அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட மீனாட்சி எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே சரிந்தார். அருகில் இருந்தவர்கள் மீனாட்சியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சோதனை செய்த மருத்துவர்கள் மீனாட்சி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

341
முந்தைய செய்தி