வாடகை போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்கள் ஆம்னி பேருந்துகள் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கு காலாண்டு வரி செலுத்துவது வழக்கம். அதன்படி திண்டிவனத்தில் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரி அபராதம் இன்றி செலுத்தும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தெரிவித்துள்ளார். மேற்படி, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் வரியை தமிழக அரசு கடந்த ஒன்பதாம் தேதி உயர்த்தியது. தற்போது 2023’ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை உள்ள காலாண்டிற்கான வாகன வரியை 14’ஆம் தேதிக்குள் கட்ட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் வாகன உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று அபராதம் இன்றி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வாகன உரிமையாளர்கள் காலாண்டு வரியை விரைவில் செலுத்தி ரசிது பெற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

280