விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும். இந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெருவாரியான மனுக்கள் பெறப்பட்டன. விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.பி கசாங்காய் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று விசாரித்தார். பின்பு, கூடுதல் எஸ்.பி கோவிந்தராஜ் மக்களிடமிருந்து மனுக்களை பெற்று விசாரணை செய்தார். இந்நிகழ்வு போல் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் ஆகிய உட்கோட்டங்களிலும் குறைதீர் நாள் மனுக்கள் பெற்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த முகாமில் பெறப்பட்ட 175 புகார் மனுக்களில் 145 புகார் மனுக்களின் மீது உடனடி விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என எஸ்.பி தெரிவித்தார்.
குறைதீர் நாள் கூட்டத்தில் குவிந்த புகார் மனுக்கள்
முகாமில் மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டது

302
முந்தைய செய்தி