திண்டிவனத்தில் நத்தமேடு பகுதி 20’வது வார்டில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள், சாலை வசதி, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது சம்பந்தமாக திண்டிவனம் நகராட்சியில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் தீபந்தங்களுடன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் திடீரென தீப்பந்தங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட தகவலறிந்த திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நகராட்சி நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன் என உறுதி அளித்ததை எடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள் வேண்டி தீப்பந்தத்துடன் சாலை மறியல்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

282
முந்தைய செய்தி