கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது, காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை தேர்வாணையம் மூலம் நிரப்புவது மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் நீட்சியாக வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன், பின்பு திண்டிவனம் பொறுப்பு சப்-கலெக்டர் திரு.தமிழரசனை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தனர். இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்
வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனு

280
முந்தைய செய்தி