முகப்பு மரக்காணம் 300 விவசாய குடும்பங்களுக்கு 6600 தென்னங்கன்றுகள்

300 விவசாய குடும்பங்களுக்கு 6600 தென்னங்கன்றுகள்

11 கிராமங்களில் வேளாண் துறை வழங்கியது

by Tindivanam News
6600 coconut saplings given to farmer families in marakkanam block

மரக்காணம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள், மின்கல தெளிப்பான்கள், உயிர் உரங்கள், ஜிப்சம், ஜிங்க் சல்பேட், வேளாண் உபகரண கிட்டுகள் முதலியன வழங்கப்பட்டு வருகிறது, குறிப்பாக நகர், நல்லாளம், வடநெற்குணம் , வன்னிப்பேர், அனுமந்தை, செட்டிகுப்பம், பெருமுக்கல், டி. நல்லாளம், சிங்கனூர், தென்பசியார், தென்கலவாய் ஆகிய 11 கிராம பஞ்சாயத்துகளிலும் தலா 300 விவசாய குடும்பங்களுக்கு 22 கன்றுகள் வீதம் 6600 கன்றுகள் ரூபாய் 3 லட்சத்து 96 ஆயிரம் மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. நகர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கினார், வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் முன்னிலை வகித்தார். மரக்காணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தயாளன் தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் அர்ச்சுணன், கிராம பஞ்சாயத்து தலைவர் குமுதா ஜெயமூர்த்தி, துணை வேளாண்மை அலுவலர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரஞ்சனி மற்றும் தினகரன் செய்திருந்தனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  டோல்கேட் நிர்வாகத்திடம் மீட்பு வாகனம் ஓட்டுவதற்கு ஆளில்லை!

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole