முகப்பு திண்டிவனம் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி

திண்டிவனம் அருகே சோகம்

by Tindivanam News
Cow died in electric shock at melpakkam village near tindivanam

திண்டிவனம் அருகே உள்ள மேல்பாக்கம் மதுரா பெருமாள் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். மேல்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவரான இவருக்கு 7 பசு மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை பூபாலனின் தாய் ராணி மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றபோது வைரபுரம் விவசாய நிலப்பகுதியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற உயரழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டின் மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி அந்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர். தகவல் அறிந்து வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole