ரோஷணை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரோஷணை அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சரசு, 53; இவர், திண்டிவனம், காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மெஸ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கடையை பூட்டி கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இருவர், சரசு கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர். இதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை வழிப்பறி
வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

265
முந்தைய செய்தி