திண்டிவனத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவா தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, கால்நடை, மருந்துவம், கல்வித்துறை, உள்ளாட்சி துறை அலுவலர்கள், மயிலம், ஒலக்கூர் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், திண்டிவனம் வட்டார பகுதியில், மழை பாதிப்பை தடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.