திண்டிவனத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் ஆய்வு செய்தனர். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உள்ளவர்களும், காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களும் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் வந்தது. அதனைத் தொடர்ந்து, எஸ்.பி., சசாங்சாய் உத்தரவின் பேரில், திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சுதன், சீனுவாசன் மற்றும் போலீசார், ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியில் உள்ள பாஸ்கர், சஞ்சீவிராயன்பேட்டை மணிகண்டன், பொலக்குப்பம் ரோடு யுவராஜ் ஆகியோர்களின் வீடுகளுக்குச் சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
திண்டிவனம் ரவுடிகளின் வீடுகளின் போலீசார் தீடீர் ஆய்வு
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

290