திண்டிவனம் பகுதியில் வனவிலங்குகளை பிடித்து விற்கும் குற்றச்செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு திண்டிவனம் அருகே கேணிப்பட்டு பகுதியில் வனத்துறை வனவர் கோகுல லட்சுமி தலைமையில் வனக்காப்பாளர்கள் பிரபு மற்றும் சதாம் உசேன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த இருவரை விசாரிக்கும் போது அவர்கள் உடும்பு பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கீழ் எடையாளம் பகுதி சேர்ந்த குமார் மற்றும் விஜி என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடும்பு வைத்திருந்த இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப் பதிவு

311
முந்தைய செய்தி