சமீபத்தில் பெய்த கனமழையாலும், மிக்ஜாம் புயல் காரணமாலும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேலாக பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளுதவி, உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 30 லட்சம் அளவில் நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 10 கிலோ அரிசி மூட்டைகள், 25 கிலோ அரிசி மூட்டைகள், பெட்ஷீட்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் ரஸ்க் பாக்கெட்கள் ஆகியவனும் அடங்கும். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மரக்காணத்திலிருந்து செல்லும் மிக்ஜாம் நிவாரண பொருட்கள்
ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைப்பு

242
முந்தைய செய்தி