முகப்பு அரசியல் அதிமுக பிரச்சார கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை

அதிமுக பிரச்சார கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை

திண்டிவனம் பகுதியில் நடந்த கூட்டத்தில் பரபரப்பு

by Tindivanam News
a drunken teenager ran into admk street rally

தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.எல்.ஏ திரு.அர்ஜுனன் தலைமையில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் திருமதி. சசிரேகா கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வின்போது கிடங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போதையில் கூட்ட மேடையில் ஏற முயற்சி செய்தார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்பு விசாரிக்கையில் அவர் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும் அவரின்மேல் கஞ்சா, திருட்டு போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்தது. மீண்டும் கூட்டம் முடிந்து புறப்பட்ட திருமதி. சசிரேகாவின் காரை மறித்தும் ரகளையில் ஈடுபட்ட சரவணனை போலீசார் இழுத்துச் சென்றனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்க கூடாது

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole