ஆசிய நாடுகளில் தாய்லாந்து நாடு சுற்றுலாத்துறைக்கு மிகவும் பிரபலம். இந்த நாடு சுற்றுலாத் துறையில் வரும் வருமானத்தையே முதன்மையாக கொண்டுள்ளது. தாய்லாந்து நாட்டிற்கு மலேசியா, சீனா மற்றும் அண்டை நாடுகளிலிருந்து பல சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்வதுண்டு. இந்நிலையில், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நிரந்தரமான இலவச விசா நடவடிக்கை எடுக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 28 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்து வந்து சென்றுள்ளனர். அதில் முக்கியமாக மலேசியாவை சேர்ந்தவர்கள் 4.5 மில்லியன் பயணிகளும், சீனாவைச் சேர்ந்தவர்கள் 3.5 மில்லியன் பயணிகளும் ஆவர். தற்போது, தாய்லாந்தில் நிரந்தர இலவச விசா அறிவிப்பு வெளியான செய்தி சீன மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.