கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண குவிவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் நின்று காலை சூரிய உதயத்தையும், மாலை சூரிய அஸ்தமனத்தையும் பொதுமக்கள் கண்டுகளிப்பர். இந்நிலையில் தொடர் விடுமுறை நாட்களாகவும், புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வந்தனர். கடந்த திங்கள் அன்று காலையில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர் இருப்பினும், காலை மேக மூட்டத்தின் காரணமாக சூரிய உதயம் சரியாக தெரியவில்லை.
இதனால் வட மாநிலங்களில் இருந்தும், தமிழக வட மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மிகவும் சோகமடைந்தனர். காலையில் சூரிய உதயத்தை காணலாம் என்று வந்த சுற்றுலா பயணிகள் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணி கூட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.