இந்த வருடம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்தது. இருப்பினும், புதுச்சேரி பகுதியில் உள்ள நொணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு சவாரிக்கு மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் வெறிச்சோடியேக் காணப்பட்டது. ஆண்டுதோறும், வடமாநிலங்களில் இருந்தும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற ஊர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு படையெடுப்பது வழக்கம். இந்த ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பலரும் வருகைத் தந்திருந்தனர். நள்ளிரவு 12 மணி முதலே கேக் வெட்டுவதும் பட்டாசு வெடிப்பதுமாக புத்தாண்டு கொண்டாட்டம் கலைக்கட்டியது. இருப்பினும், புதுச்சேரியில் உள்ள சுண்ணாம்பாறு படகு குழாமில் காலையில் மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்ற வருடம் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக படகு குழாமல் படகு சவாரி ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த வருடமும் புதுச்சேரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், படகு குழாமில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டு இருக்கும் என்று நினைத்துக் கொண்டு சுண்ணாம்பாறு படகு குழாமிற்கு அதிகமாக யாரும் செல்லவில்லை. இதனால், படகு சவாரி செய்ய கூட்ட நெரிசல் இல்லாமல் படகு குழாம் வெறிச்சோடி இருந்தது.