தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ஆண்டின் இறுதி விடுமுறையையும், புத்தாண்டு விடுமுறையையும் கொண்டாட மக்கள் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுத்துச் செல்கின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதன் காரணமாக கும்பகரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து அருவியில் குளித்துக் கொண்டாடிச் சென்றனர்.