முகப்பு மற்றவை இந்திய டிரைவருக்கு அடித்த 44 கோடி லாட்டரி யோகம்

இந்திய டிரைவருக்கு அடித்த 44 கோடி லாட்டரி யோகம்

துபாய் லாட்டரியில் ரூபாய் 44 கோடி பரிசு பெற்ற இந்திய ஓட்டுனர்

by Tindivanam News
dubai lottery ticket 44 crore prize money for indian driver

வளைகுடா நாடுகளான துபாய், கத்தார் போன்ற நாடுகளில் இந்தியர்கள் பலர் பணி செய்து வருகிறார்கள். அவர்கள் ஓட்டுநர், எலக்ட்ரீசியன் மற்றும் கட்டுமான பணிகள் முதல் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலரும் வளைகுடா நாடுகளில் வேலைகளில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது. அரபு நாடுகளில் இன்றளவும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. பலரும் இந்த டிக்கெட்டுகளை வாங்கி தனக்கு பரிசு விழும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த முனவர் பைரோஸ் துபாயில் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். இவர் தொடர்ந்து துபாயில் விற்க்கும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பழக்கம் கொண்டவர்.

பலமுறை வாங்கியும் பரிசு விழவில்லை என்றாலும் என்றைக்காவது ஒரு நாள் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கடன் வாங்கியாவது லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். தற்போது கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்களில் முனவர் பைரோஸுக்கு ரூபாய் 44 கோடி பம்பர் பரிசாக கிடைத்துள்ளது. இவ்வளவு பெரிய பணம் தனக்கு லாட்டரியில் அடித்ததை தன்னால் நம்பவே முடியவில்லை என ஃபைரோஸ் தெரிவித்துள்ளார். இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்க தனக்கு உதவிய முப்பது பேருக்கும் 44 கோடியை பகிர்ந்தளிக்க உள்ளதாக பயரோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  38% அதிகரித்த ஆடம்பர சொகுசு வீடுகள் விற்பனை - CBRE

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole