முகப்பு ஆன்மிகம் புதுசேரியில் திண்டிவனம் பெருமாளுக்கு திருக்கல்யாணம்

புதுசேரியில் திண்டிவனம் பெருமாளுக்கு திருக்கல்யாணம்

முன்னாள் முதல்வர் நாராயண சாமி பங்கேற்பு

by Tindivanam News

திண்டிவனம் நல்லியக்கோடன் சீனிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பகதர்கள் பலரும் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர். புதுச்சேரியில் நடந்த மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்க திண்டிவனம், நல்லியக்கோடன் நகரில் உள்ள அலுமேலு மங்கா சமேதா சீனிவாச பெருமாள், கடந்த 23ம் தேதி புதுச்சேரி வந்தடைந்தார். 24ஆம் தேதி, காலை வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில் சுவாமி எழுந்தருளினார். அதையடுத்து, புதுச்சேரி வட முகத்து செட்டியார் திருமண மண்டபத்தில், மாசி மக கடல் தீர்த்தவாரி கமிட்டி சார்பில், ஞாயிறு காலை 10:30 மணிக்கு, திருக்கோவிலுார் ஜீயர் மடாதிபதி, 26ம் பட்டம் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்நிகழ்வில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தனர். கமிட்டி தலைவர் பொன்னுரங்கம், பொருளாளர் முனிசாமி, செயலாளர் சிவானந்தம், நடராஜன், கிருஷ்ணசாமி, தேவநாதன், வெங்கடாசலபதி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  சிதம்பரம் கோவில் சொத்துக்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole