முகப்பு விளையாட்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா

இந்திய ரசிகர்கள் உற்சாகம்

by Tindivanam News

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. துவக்கம் முதலே ஆதிக்கம் இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியை வென்று, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று சாதித்தது.

ராஞ்சியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தது. இந்திய அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஜோ ரூட் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோர் ஆடுகளத்தில் இருந்தனர். பின்பு, 2வது நாள் ஆட்டத்தில் அரைசதம் கடந்த ராபின்சன் 58 ரன்னில் அவுட்டானார். அடுத்துவந்த பஷீர், ஆண்டர்சன் ஆகியோர் ‘டக் அவுட்’ ஆக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.

india england test series ind vs eng

தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை து துவங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிறகு சுப்மன் கில் 38, படிடர் 17, ஜடேஜா 12, சர்பராஸ் கான் 14, அஸ்வின் 1 ரன்னுக்கு என ஆட்டமிழந்தனர். துவக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் பஷீர் 4 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்து விளையாடினர். இதில் குல்தீப் யாதவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆகாஷ் தீப்’க்கு அதிக ஸ்டிரைக் கொடுக்காமல் விளையாடிய துருவ் ஜூரெல் 90 ரன்கள் எடுத்தார்.

  நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும், நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் களம்

துருவ் ஜூரெலின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.இதன் மூலம் இந்திய அணி, இங்கிலாந்தை விட 46 ரன்கள் பின்னிலையில் இருந்தது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட், டாம் ஹார்ட்லி 3 விக்கெட், ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்பின் இங்கிலாந்து அணி களமிறங்கி இந்திய பந்து வீச்சாளர்கள் பந்தை சமாளிக்க இயலாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானார்கள். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள், பேர்ஸ்டோவ் 30 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 5 விக்கெட், குல்தீப் யாதவ் 4 விக்கெட், ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 40 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 4-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 192 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்களும், சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole