இந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் சமீபத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்ரதா சாகு, ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை. மேலும், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாட்டிற்கு துணை ராணுவம்.வரவழைக்கப்படுகிறது.
200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர். கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் இந்த வருடம் கூடுதலாக துணை ராணுவத்தினர் வருகின்றனர்”