முகப்பு குற்றச்செய்திகள் கிரிவலம் சென்ற இளம்பெண்ணின் சாவில் மர்மம் விலகல் !

கிரிவலம் சென்ற இளம்பெண்ணின் சாவில் மர்மம் விலகல் !

குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

by Tindivanam News

சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து, கேரளவைச் சேர்ந்த இளம்பெண் காதலுடன் கிரிவலம் செல்லும்போது, காரில் அடிபட்டு இறந்ததாக செய்திகள் வெளியாகின. அப்போது, பெண்ணின் சடலத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த காதலனிடம் விசாரணையை துவக்கிய போலீசார் தற்போது குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்துள்ளனர். என்ன நடந்தது முழுமையாகப் பார்ப்போம்…

கடந்த வெள்ளிக்கிழமைஎன்று, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் ஒலக்கூரில் இளம்பெண் ஒருவர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். இந்த விபத்து தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண் உடல் அருகே நின்ற வாலிபரிடம் (இளம்பெண்ணின் காதலன்) விசாரணை நடத்தினர். விசாரனையில், சென்னை மாதவரம் பகுதி திருமலை நகரைச் சேர்ந்த ரமேஷ் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் என்பதும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி, துணிக்கடையில் வேலை செய்து வந்த கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த பவித்ரா’வும் காதலித்து வந்தது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கடந்த பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக இரவு 10:30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து வந்துகொண்டு இருந்தனர். அப்போது, திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூர் கிராமத்தில் இளைஞர்கள் இருவர் அந்த பெண்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றபோது இளம்பெண் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளியைத் தேடி வந்த நிலையில், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் என்பவர் வன்கொடுமை செய்ய முயன்றதும், அவர்களிடமிருந்து செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இவன்மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

  சீசிங் ராஜா - நேற்று கைது, இன்று என்கவுன்ட்டர்

இதனையடுத்து குற்றவாளியை போலீசார் விக்கிரவாண்டி பகுதியில் பிடித்த போது போலீசார் அய்யப்பன், தீபன் ஆகிய இருவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அதனால் தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் குற்றவாளியை துப்பாக்கியால் கனுக்காலில் சுட்டு பிடித்தார். குற்றவாளியால் காயம்பட்ட இரு போலீசாரும், குண்டடிப்பட்ட குற்றவாளியும் முண்டியம்பாக்கம அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சமபவம் விழுப்புரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு, சென்னையில் இருந்து காதலனுடன் கிரிவலத்திற்கு சென்ற இளம் பெண்னை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளியை காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole