சமீபத்தில், வயதான தம்பதி இருவர் கடந்த 12ம் தேதி அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு சக்கர நாற்காலி வேண்டுமென்று புக் செய்துள்ளனர். இருப்பினும், மும்பையில் சக்கர நாற்காலி போதுமான அளவில் இல்லாதததால், இந்த தம்பதியருக்கு ஒரு சக்கர நாற்காலி மட்டுமே ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்று சக்கர நாற்காலி வரும்வரை காத்திருக்கக் கூறியுள்ளனர். இந்நிலையில், வயதான தன் மனைவியை தனியே விட மனமில்லாத அந்த முதியவர், மனைவியை அமரவைத்து 1.5 கி.மீ நடந்தே சென்றுள்ளார், அப்போது நுழைவு வாயில் அருகே சென்றதும் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்டு விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது..
முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது. மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்திடவும் உத்தரவிட்டுள்ளது.