இந்திய நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வளர்ச்சித்திட்டங்கள் மட்டுமில்லாமல், நாட்டிலுள்ள பழங்கால சின்னங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கவும் அரசு பல சீரமைப்பு பணிகளை செய்து வருகிறது.மேலும், நீண்டநாட்களாக பிரச்சனையில் இருந்த ராமர் கோயில் விவகாரத்தை முடித்துவைத்து, இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், தற்போது இந்து கோயில்களே இல்லாத அரபுநாட்டில் சுமார் ரூ.800 கோடி மதிப்பில் இந்து கோயில் கட்டப்பட்டு, பிரதமர் மோடி அவர்களின் கரங்களால் மக்களுக்கு அர்பணிக்கப்பட்டது. தற்போது, மார்ச் மாதம் முதல் பிரதமர் மோடி திறந்து வைத்த இந்தக் கோயில் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.
இந்துக் கோயில்கள் இந்தியாவில் மட்டுமன்று, உலகின் பல நாடுகளிலும் உள்ளன. இப்பொது, துபாயில் உள்ள அபுதாபியில் முதல்முறையாக இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோயில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் கோயில் மூடப்பட்டு இருக்கும், அன்று தரிசனம் செய்ய அனுமதியில்லை.
இந்தக் கோயில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அபு முரேகாவில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த அற்புதமான கோயிலை போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷரா புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) கட்டியுள்ளது.இந்தக் கோயில் முழுவதும் பல்வேறு சிற்பங்களால் ஆனது.