இனிமேல் எங்கள் கல்லூரியில் பயிலும் அனைத்து மருத்துவ மாணவருக்கும் கட்டணம் இல்லை. அனைவருக்கும் மருத்துவப்படிப்பு இலவசம் என அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி அறிவிப்பு. அட, ஆமாங்க இப்போது படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணமும் 4’ஆம் ஆண்டில் திருப்பித்தரப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த செய்தியால் அமெரிக்கா கல்லூரி மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அமெரிக்கா நாட்டில், நியூயார்க் நகரத்தின் பகுதியில் புகழ்பெற்ற நியூயார்க் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இந்த கல்லூரி நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று மாணவர்ககுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவப்படிப்பை சொல்லிக்கொடுத்து வந்தது.
இந்த கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் பேசிய விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவனத்தின் பொருளாளர் இந்த கல்லூரிக்கு ஒரு பில்லியன் டாலர் நன்கெடை வழங்குவதாக தெரிவித்தார். இதன்மூலம் இந்துக்கல்லூரியில் இப்போதும் சரி, இனி வருங்காலத்திலும் சரி யாரும் படிப்புக்கான கட்டணத்தை செலுத்த வேண்டாம் என அறிவித்தார். இந்த உயர்வான அறிவிப்பை கேட்டதும் மாணவர்கள் துள்ளி குதித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பல மாணவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். அமெரிக்க நாட்டின் வரலாற்றில் இது போன்ற உயர்வான நன்கொடை யாரும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதுமாதிரி நடக்குமா என கமெண்டில் சொல்லுங்க, மக்களே !!