ஆண்டுதோறும் உலகளவில் சிறந்த திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர், தொழில்நுட்பம் என அணைத்து சினிமா பிரிவுகளிலும் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும்.
2023’ம் வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதன்படி, கிரிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளிவந்த ஒப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்த வருடம் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்தது.
2023’ம் ஆண்டு ஆஸ்கார் விருதுபட்டியல் :
- சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் சிலியன் மர்ஃபி. Oppenheimer படத்தில் சிறப்பாக நடித்ததற்காக Cillian Murphy-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
- சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு Poor Things படத்திற்காக எம்மா ஸ்டோன் பெற்றுக் கொண்டார்.
- சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிறிஸ்டோஃபர் நோலன். Oppenheimer படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன். இதுவரை 8 முறை பரிந்துரைக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
- சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது Oppenheimer படத்திற்கு வழங்கப்பட்டது.
- சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Boy And The Heron படம் வென்றது.
- சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான விருது The Zone Of Interest படத்திற்கு வழங்கப்பட்டது.
- சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதையும், சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது Poor Things திரைப்படம்.
- சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை War Is Over குறும்படம் வென்றது.
- சிறந்த படத்தொகுப்புக்காக Oppenheimer திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
- சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது The Last Repair Shop படத்திற்கு வழங்கப்பட்டது.
ஆக, ஒட்டுமொத்தமாக 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது கிரிஸ்டோபர் நோலனின் Oppenheimer திரைப்படம். சிறந்த இயக்குநர், நடிகர், துணை நடிகர், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட விருதுகளை வென்றது. Poor Things திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.