சமீபத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பரிசளிக்கும் விதமாக மத்திய அரசு வீடு உபயோக சிலிண்டர்களின் விலையை 100 ரூபாய் வரை குறைத்திருந்தது. தற்போது, இந்திய பாராளுமன்றத் தேர்தல் அட்டவணை வெளியாக உள்ளநிலையில் பெட்ரோல், டீசல் விலையையும் ரூ. 2 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேல் குறையாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு தமிழ்நாட்டில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, ரூ.102.63-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டா் பெட்ரோல், ரூ.100.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டா் டீசல், தற்போது ரூ.92.34-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை நிலவரம் :
பெட்ரோல் : பழைய விலை : ரூ.102.63, புதிய விலை : ரூ.100.75
டீசல் : பழைய விலை : ரூ.94.24, புதிய விலை : ரூ.92.34
இந்த விலைகுறைப்பு தேர்தலுக்காகத்தான் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர். விலை குறைப்பை லாரி உரிமையாளர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் வரவேற்றுள்ளனர்.