தமிழக மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மற்றக்கட்சிகள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஆளும் திமுக கட்சி கூட்டணி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, தற்போது பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக மொத்தமாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதன்படி, திமுக வேட்பாளர்கள் பட்டியல் :-
- தூத்துக்குடி தொகுதி – கனிமொழி
- தென்காசி தொகுதி – டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்
- வடசென்னை தொகுதி – டாக்டர் கலாநிதி வீராசாமி
- தென்சென்னை தொகுதி – தமிழச்சி தங்கபாண்டியன்
- மத்தியசென்னை தொகுதி – தயாநிதி மாறன்
- ஸ்ரீபெரும்புதூர் தொகுதி – டி.ஆர்.பாலு
- காஞ்சீபுரம் தொகுதி – ஜி.செல்வம்
- அரக்கோணம் தொகுதி – எஸ்.ஜெகத்ரட்சகன்
- திருவண்ணாமலை தொகுதி – அண்ணாதுரை
- தர்மபுரி தொகுதி – ஆ.மணி
- ஆரணி தொகுதி – தரணிவேந்தன்
- வேலூர் தொகுதி – கதிர் ஆனந்த்,
- கள்ளக்குறிச்சி தொகுதி – மலையரசன்
- சேலம் தொகுதி – செல்வகணபதி
- கோயம்புத்தூர் தொகுதி – கணபதி ராஜ்குமார்.
- பெரம்பலூர் தொகுதி – அருண் நேரு
- நீலகிரி தொகுதி – ஆ.ராசா,
- பொள்ளாச்சி தொகுதி – ஈஸ்வரசாமி
- தஞ்சாவூர் தொகுதி – முரசொலி
- ஈரோடு தொகுதி – பிரகாஷ்
- தேனி தொகுதி – தங்க தமிழ்செல்வன்
திமுக கட்சியில், ஏற்கனவே எம்,பி’யாக இருக்கும் சிலருக்கு இந்த சீட்டும் மறுக்கப்பட்டுள்ளது, முக்கியமாக, தர்மபுரி எம்.பி செந்தில் குமாருக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை.
திமுக வில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.பிக்கள்:
- செந்தில் குமார் – தர்மபுரி,
- எஸ்.ஆர்.பார்த்திபன் – சேலம்,
- சண்முகசுந்தரம் – பொள்ளாச்சி,
- கவுதம சிகாமணி – கள்ளக்குறிச்சி,
- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் – தஞ்சாவூர்,
- தனுஷ் எம். குமார் – தென்காசி