இந்த வருட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்க இருக்கும் நிலையில், சென்னை குறிப்பாக CSK அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகாலமாக CSK கேப்டனாக இருந்த தோனி பதவி விலகினார்.
இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாகத் துவங்குகிறது. துவக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை அணியும், விராட் கோலி விளையாடும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத விதமாக CSK அணியில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. இதுவரை 5 முறை சென்னை அணிக்காக கேப்டனாக விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றுத்தந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
சென்னை அணிக்கான புதிய கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இன்று நடந்த ஐ.பி.எல். கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் சென்னை அணி சார்பில் ருத்துராஜ்’தான் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு இது கடைசி ஐ.பி.எல். சீசன் எனக்கருதப்படும் நிலையில், அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.