தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். திமுக, அதிமுக என பிரதான கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்ட நிலையில், இன்றுடன் தொகுதி பங்கீடு முடிந்து பாஜக கட்சி சார்பில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் இருக்கும் அனைவருமே நட்சத்திர வேட்பாளர்களாவர்.
பாஜக வேட்பாளர்களின் பட்டியல் :-
- தென் சென்னை – தமிழிசை சௌந்தரராஜன்.
- மத்திய சென்னை – வினோஜ் P. செல்வம்.
- வேலூர் – AC சண்முகம்.
- கிருஷ்ணகிரி – நரசிம்மன்.
- நீலகிரி – எல்.முருகன்.
- கோயம்புத்தூர் – அண்ணாமலை.
- பெரம்பலூர் – பாரிவேந்தர்.
- தூத்துக்குடி – நயினார் நாகேந்திரன்.
- கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்.
மேலும், இன்று பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் வெளியானது. அவை, காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஆகும்.
கோயம்புத்தூர் தொகுதியில், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறக்கப்படுவது பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.