நாள் : 24.03.2024
👉தமிழக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானது. கரூரில் மீண்டும் ஜோதிமணி களமிறங்குகிறார்.
👉நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
👉ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக உயர்வு. தீவிரவாதிகளுக்கு உக்ரைனில் தொடர்பு எனத் தகவல்.
👉உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
👉எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக சேலத்தில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
👉தமிழ்நாடு இல்லாமல், கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் போட்டியிடும் விசிக வேட்பாளர் பட்டியலை, தலைவர் திருமாவளவன் அறிவிப்பு.
👉திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
👉மதிமுக கட்சியைச் சேர்ந்த எம்.பி கணேசமூர்த்தி தனது வீட்டில் தீடிர் தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்.
👉அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தகவல்.
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏