2020’ம் ஆண்டில் நடைபெற்ற சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டிர்கள். அந்த நேரத்தில், காவல்துறையினருக்கு எதிராகவும், ஆளும் கட்சிக்கு எதிராகவும் பெரும் அதிர்வலைகளை அந்த நிகழ்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது மூன்றே ஆண்டுகளில் 102 காவல் சிறைக்கைதிகளின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் மக்களின் கவனத்தை பெற்றுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சமீப காலமாக சிறையில் மர்ம மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.ஆர். ராஜா என்பவர் தமிழக்தில் உள்ள மத்திய சிறைகளில் 2022-2024 வரை உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை, சிறைகளில் கைதிகளுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள், மருத்துவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வேண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனு செய்திருந்தார். அந்த மனுவின்மேல் வழங்கப்பட்ட விவரங்கள் தற்போது மக்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்மூலம், தமிழ்நாட்டில் மொத்தமாக ஐந்து மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் 2022-2024 வரை காலகட்டத்தில் உயிரிழந்த கைதிகள் விவரம், மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை விவரங்கள் வழங்கப்பட்டன. அதன்படி விவரங்கள் கீழ்வருமாறு,
மதுரை மத்திய சிறைச்சாலை
உயிரிழப்பு எண்ணிக்கை – 28
உடல்நலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை -2349
மனநலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை – 99
கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை
உயிரிழப்பு எண்ணிக்கை – 35
உடல்நலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை -3769
மனநலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை – 37
திருச்சி மத்திய சிறைச்சாலை
உயிரிழப்பு எண்ணிக்கை – 29
உடல்நலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை – 830
மனநலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை – 33
கடலூர் மத்திய சிறைச்சாலை
உயிரிழப்பு எண்ணிக்கை – 06
உடல்நலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை – 3570
மனநலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை – 40
வேலூர் மத்திய சிறைச்சாலை
உயிரிழப்பு எண்ணிக்கை – 16
மனநலபாதிப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கை – 38
ஆக, மொத்தமாக 5 மத்திய சிறைகளிலும் 2022-ஆம் ஆண்டு முதல் 2024 வரை 102 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 214 சிறைக் கைதிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு, 98 சிறைக் கைதிகள் மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனா் என தெரியவந்துள்ளது.