உலகளவில் வாட்ஸ் ஆப்’ல் பயனர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருவதால், அதன் பயனர்களின் நம்பிக்கையைப் பெற, சமீபகாலமாக வாட்ஸ் ஆப் நிறூவனம் புதிய அப்டேட்’களை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
தற்போது, வாட்ஸ் ஆப்பில் வைக்கப்படும் ப்ரொபைல் படங்களைப் பாதுகாக்க புதிய அப்டேட்டை அந்நிறுவனம் தந்துள்ளது. அதன்படி இனிமேல், ஒருவரது வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனில் வைக்கும் புரொஃபைல் படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பது தடை செய்யப்படுகிறது.
ஏற்கனவே ஃபேஸ் புக் சமூகவலைதளத்தில் ஒரு பயனரின் தேர்வுக்கேற்ப ப்ரொபைல் படத்தைப் பார்க்கும் வசதியை வைத்துக்கொள்ளும் நடைமுறை உள்ளது. இந்த வசதி முன்னரே ஃபேஸ் புக்’கில் இருந்தாலும்கூட தற்போதுதான் வாட்ஸ் ஆப் செயலியில் ஆறுமுகம் செய்யப்படுகிறது. வாட்ஸ் ஆப்பின் தாய் நிறுவனம்தான் ஃபேஸ்புக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பாதுகாப்பு வசதியின்படி, இதற்கு முன்பு ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் என இரண்டு மொபைல்களிலும் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை வாட்ஸ் ஆப் தடை செய்திருந்தாலும், புரொஃபைல் படங்களை இன்னொரு போன் கேமரா மூலம் படம் எடுக்க இயலும்.
ஆனால், தற்போது வாட்ஸ் ஆப் பயனர்கள் தாம் அனுமதிக்கும் நபர்கள் தவிர்த்து வேறுயாரும் அவர்களின் புரொஃபைல் படங்களை பார்வையிட முடியாதபடி தடை செய்யும் அமைப்பை நடைமுறை செய்வதன் மூலம், புரொஃபைல் படங்களின் பாதுகாப்பை மேம்படுத்தமுடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.