தமிழ் செய்திகள் | நாள் : 15.05.2024
👉 இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53800’க்கு விற்பனையானது.
👉 உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியில், பெரியவர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.125ஆக குறைக்கப்பட்டுள்ளது.
👉 ‘FAST TAG’ சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை (மே 16) முதல் அடுத்த 7 நாட்களுக்கு வனத்துறை தடை அறிவித்துள்ளது.
👉 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் குழு பரிந்துரை. தரமான ஆக்சிஜன் உற்பத்தி, முறையான மருத்துவக் கழிவு அப்புறப்படுத்துதல் போன்ற நிபந்தனைகள் விதிப்பு.
👉 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவியில் தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
👉 பெண் காவலர்களை தவறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, முழுக்க முழுக்க பெண் காவலர்கள் அடங்கிய குழுவை நியமித்தது காவல்துறை.
👉 கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் சர்குருநாதன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் பணிகளுக்கு 2% சதவீத கமிஷனாக 30,000 ரூபாய் பேசி 15 ஆயிரம் ரூபாய் பெற்றபோது ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
👉 தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. – click here
👉 தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. இனியும் தமிழ்நாடு அரசு உறங்கக்கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.
👉 நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில், சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு விரைவுப் பேருந்தை சுத்தம் செய்யும்போது துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு.
👉 தமிழகத்தில் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
👉 இன்று சென்னையில் மீனம்பாக்கம் – விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. பின்பு, மக்கள் மாற்று வழித்தடத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும், தமிழ் செய்திகள், மாநில செய்திகள், அரசியல் செய்திகள், இந்தியா செய்திகள், உலக செய்திகள், கல்வி செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் பல செய்திகள் அறிந்துகொள்ள நம் திண்டிவனம் செய்திகள் வலைப்பக்கத்தை பின் தொடருங்கள்.
நன்றி, வணக்கம் 🙏