கோடைவெயில் வாட்டிவரும் நிலையில் ஆங்காங்கே மின்சாரமும் தடைபட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சிதரும் விதமாக தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என தகவல் பரவி வருகிறது. இது சம்மந்தமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மறுப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியுட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு என மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது 100 யூனிட் இலவச மின்சாரமும் ரத்து என்ற செய்தி மக்களை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மின்சார வாரியம் விளக்கம்:-
இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சார மானியம் ரத்து என்பது வதந்தி. முன்பு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய உத்தரவுபடி, வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியமாக வழங்கப்படும். அதுவே, வீட்டின் உரிமையாளர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாள் 100 யூனிட் மின்சார மானியம் தொடரும் எனவும் மின்சார வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதார் இணைக்க காரணம் இதான் :-
சென்ற வருடம் தமிழ்நாட்டில் வீட்டு உரிமையாளர்கள் மின்வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் 100 யூனிட் மின்சாரம் பெரும் ஒரே உரிமையாளரின் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய எண்கள் கணக்கெடுக்கப்ட்டு 100 யூனிட் மின்சார மானியங்கள் கட்டுப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.