விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் ராஜசேகர் (33) என்பவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும், வீட்டில் யாரும் இல்லாத போது உள்ளே நுழைந்து பல முறை வலுக்கட்டாயமாக மாணவியிடம் உடலுறவு கொண்டதால் தற்போது நான்கு மாத கர்ப்பமாக மாணவி உள்ளார் என்னும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் ராஜசேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரனையின்போது பலத் திடுக்கிடும் தகவல்கள் வெளியானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணையில் ராஜசேகர் பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், மாணவிக்கு தேவையான அனைத்தையும் தானே செய்து தருகிறேன் எனவும் கூறி ஆசைக் காட்டியுள்ளார். மேலும், மாணவிக்கு புதிய ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து தன்வசப்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. தொடந்து ராஜசேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் கைதுசெய்தனர்.
இவ்வாறு, 15 வயது பள்ளி படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, பின் மாணவியை கர்ப்பமாக்கி இருக்கும் செய்தி, ஊர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.