ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்போர் அனைவரும் ஜி-மெயில் (GMAIL) பயன்படுத்துபவர்களாவர். சென்ற ஆண்டிலிருந்து, நீண்டநாட்கள் பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் முகவரிகளை, ஜி-மெயில் சேவைகளை வழங்கி வரும் கூகுள் நீக்கம் செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு உலகம் முழுவதும் பலகோடி ஜி-மெயில் அக்கவுண்ட்டுகள் டெலிட் செய்யப்பட தயாராக உள்ளன. அதாவது கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த டெலீட் செய்யும் பணி என்பது செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு கூகிள் தொடங்க உள்ளது. மேலும் குறிப்பிட்ட இ-மெயில் முகவரி நீக்கப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த சிக்கலில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், உங்களது ஜி-மெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தி ஆக்டிவ்வாக வைத்திருக்க வேண்டும். அதாவது கடந்த 2 ஆண்டுகளாக நீங்கள் ஜி-மெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட இப்போது உடனே அதனை பயன்படுத்தி வந்துள்ள மெயிலை படித்தால் போதும். இல்லாவிட்டால் அந்த ஜி-மெயில் அக்கவுண்ட்டில் இருந்து இன்னொரு ஜி-மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பினால் போதும்.
இப்படி செய்யும்பட்சத்தில் உங்களது ஜி-மெயில் அக்கௌன்ட் டெலிட் செய்யப்படாமல் தப்பிக்கும் என கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.