முகப்பு சினிமா வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற ஜானிடெப்

வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற ஜானிடெப்

ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும்

by Tindivanam News

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு இத்தாலியில் நடைபெறவுள்ள ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. 2003-ல் வெளிவந்த “தி பைரேட் ஆப் தி கரீபியன்” திரைப்படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பெரும் புகழைப் பெற்றார். தொடர்ந்து இந்த படத்தின் பாகங்களும் வெளியானது, பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரபலமான நடிகை ஆம்பர் ஹெட்டை காதலித்து 2015-ல் திருமணம் செய்துகொண்ட ஜானி டெப், பின்னர் விவாகரத்து செய்தது அனைவரும் அறிந்ததே. அவர் கலை உலகில் சாதித்தவற்றுக்காகவே இத்தாலியில் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதினைப் பெறவுள்ளார்.

கடந்த 1997-ல் தி பிரேவ் படத்தை டைரக்டு செய்து இருந்தார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் ‘மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்’ படம் வெளியானது. இந்த நிலையில் ஜானிடெப்புக்கு இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

  திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole