முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்களைச் சிறையில் இருந்த நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. இதனை தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த அடுத்த நிமிடமே கரூரில் திமுகவினர் பட்டாசை வெடித்து கொண்டாடத் தொடங்கினர்.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாய்தா வாங்க கூடாது. வெளிநாடு செல்ல கூடாது. சாட்சிகளை கலைக்க கூடாது, என பல நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனுக்கான விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:
- ரூபாய் 25 லட்சத்திற்கு இரு நபர் உத்தரவாதம் (பாண்ட்) வழங்கப்பட வேண்டும்
- சாட்சியங்களை கலைக்கவோ அல்லது சந்தித்து பேசவோ கூடாது
- வாரத்தின் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 11-12க்குள் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் துணை இயக்குநர் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும்,
- மாதத்தின் முதல் சனிக்கிழமையில் மூன்று குற்ற வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் முன்பாக ஆஜராக வேண்டும்.
- பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்
- நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டும்
- தேவையில்லாமல் வாய்தா வாங்க கூடாது