முகப்பு சினிமா பழனி பஞ்சாமிர்தம் சர்ச்சை – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் சர்ச்சை – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

by Tindivanam News

சர்ச்சைகளுக்குப் பெயர்பெற்ற இயக்குநர் திரு.மோகன் ஜி அவர்கள். இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துகளே பல சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்டுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்து நாடு முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், பழனி பஞ்சாமிர்தம் குறித்து வலையொளியில் சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாக இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டு, விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தது.

அப்போது, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவில் கூறியதாவது,

“பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும். வாய் சொல் வீரராக இல்லாமல், கோயிலுக்கு உண்மையான சேவை செய்யத் தயாரா?

எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும். எந்த யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்தாரோ? அதே யூடியூப் சேனலில் வருத்தம் தெரிவித்து பேட்டி கொடுக்க வேண்டும்.

  சென்னை பல்லாவரத்தில் 3 பேர் பலி… கழிவுநீர் கலந்த குடிநீர் தான் காரணமா?

சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டு பதிவிட வேண்டும். மேலும் தமிழ், ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும்” என தெரிவித்திருந்தது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole