சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை தினத்தை முன்னிட்டு, மிகப் பெரிய அளவிலான விமான வான் சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அக்.6’ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டு, 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், சென்னையில் அக் 6-ம் தேதி மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
வானில் 72 விமானங்களின் வண்ணமய சாகச நிகழ்வை, சென்னை மெரினா மட்டுமின்றி, தெற்கில் கோவளம் முதல் வடக்கில் எண்ணூர் வரை கடற்கரைகளிலும், மொட்டை மாடிகளிலும் என 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரசித்ததால் லிம்கா சாதனை புத்தகத்தில் நிகழ்வு இடம்பிடித்துள்ளது. டெல்லி, பிரயாக்ராஜ், சண்டிகரில் இந்த சாகசங்கள் நடைபெற்றுள்ள போதிலும் விமானங்கள் எண்ணிக்கையிலும், பார்வையாளர் எண்ணிக்கையிலும் சென்னையே பிரமாண்டமாக அமைந்தது.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி அமர்ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.