தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 06184 என்ற ரயில் தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் புறப்படும். இந்த மாதம் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் மற்றும் நவம்பர் மாததத்தில் 01,08,15,22,29 ஆகிய தேதிகளிலும் புறப்படும்.
அதன்படி,
- வருகின்ற 11/10/24 முதல் 29/11/24 வரை வாரத்தில் (வெள்ளி) மட்டும் தாம்பரத்திலிருந்து மாலை 6:00pm புறப்பட்டு மறுநாள் காலை :8:10am மணிக்கு கோயம்பத்தூர் சென்று அடையும்.
- மறுமார்க்கமாக 13/10/24 முதல் 01/12/24 கோயம்பத்தூர் (ஞாயிறு) மட்டும் இரவு 11:45pm புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் மதியம் 12:30pm மணிக்கு சென்று அடையும்.
ரயில் நிறுத்தங்கள்: செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி திருப்பதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஓட்டன்சத்திரம் பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கிணத்துகடவு, போத்தனூர், கோயம்பத்தூர்.
ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தாம்பரம் – கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.