2017 முதல் 2022 வரை மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் இலங்கையைச் சேர்ந்த ஜெயவர்தனே. இவர் பயிற்சியாளராக இருந்தபோது மும்பை அணிக்காக மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
ஆனால் அவரது காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. மேலும் மும்பை அணி வீரர்களுக்கு இடையேயும் சுமூகமான உறவு இல்லை என்கிற புகாரும் எழுந்துள்ளது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.