முகப்பு தமிழ்நாடு நியோமேக்ஸ் சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக

நியோமேக்ஸ் சொத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுக

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

by Tindivanam News

ரூ.6,000 கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை கையகப்படுத்தி அரசாணை வெளியிட ஆணை. நிதி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி வருகிற 19ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

தவறும் பட்சத்தில் தமிழக உள்துறைச் செயலர், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை. தற்போது வரை எடுத்த நடவடிக்கை குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

தூத்துக்குடியை சேர்ந்த ஜெயின் குமார், நடராஜன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதி முரளிசங்கர் ஆணை. நியோமேக்ஸ் இயக்குநர்கள், நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி வழக்கு.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  சவரன் ரூ. 50000 நெருங்கும் தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole