முகப்பு விளையாட்டு ICC World Cup – இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எதிர்கொள்வதே எங்களுக்கு சவால்

ICC World Cup – இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எதிர்கொள்வதே எங்களுக்கு சவால்

ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்மித் கருத்து

by Tindivanam News
steve smith the australian cricketer about world cup final match against india

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ICC World Cup – உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டிவ் ஸ்மித் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில் எந்த அணியாலும் வீழ்த்த முடியாத பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது. 10 போட்டியில் விளையாடிய இந்திய அணி பத்திலும் வெற்றி பெற்றுள்ளது.மறுபக்கம் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றாலும் அடுத்த எட்டு போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டைக்கு முன்னேறி உள்ளது ஆஸ்திரேலிய அணி. இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி மிகவும் சவாலாக அமையும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன ஸ்டீவ் ஸ்மித் அவர்கள் வலைப்பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது இதுவரை எந்த அணியும் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. அதேபோல இந்திய அணி வீரர்களை எதிர்கொள்வதை விட இந்தியாவின் ரசிகர்களை எதிர்கொள்வதே எங்களுக்கு சவாலானதாக இருக்கும் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

  மல்யுத்தம் சம்மேலன இடை நீக்க உத்தரவை ஏற்கவில்லை

இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இரு அணி வீரர்களும் அகமதாபாத்தில் முகாமிட்டுள்ளனர். இந்திய அணி இன்று பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole