திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 10,000 ஏக்கர் அளவில் தர்பூசணி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதியில் தர்பூசணி விளைச்சல் அதிகமானதன் காரணமாக தர்பூசணியின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். திண்டிவனத்தை சுற்றியுள்ள முறுக்கேரி, நொளம்பூர், சலவாதி, ஊரல், பட்டணம், வெள்ளிமேடுபேட்டை, சிறுவாடி, நகர், தீவனூர் மற்றும் பல கிராமங்களில் தர்பூசணி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது,
இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே தர்பூசணி சீசன் ஆரம்பித்துள்ளது, தர்பூசணி சாகுபடியின் காலம் 60 நாட்கள் என்பதால் கடந்த டிசம்பர் மாதத்திலேயே தர்பூசணி பயிரிடப்பட்டது, மேலும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட புயல் மற்றும் மழையால் தர்பூசணி பயிர் பெருமளவில் பாதிக்கப்பட்டது, இதனால் கடலோர பகுதியில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி விளைச்சல் அதிக அளவில் சேதமடைந்தது. இருப்பினும் தற்போது பல இடங்களில் தர்பூசணி அறுவடை செய்வதால் தர்பூசணியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜனவரி இறுதி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் ஒரு டன் தர்பூசணி 18000 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு டன்னின் விலை 12000 முதல் 10 ஆயிரம் வரை விலை வீழ்ச்சு அடைந்துள்ளதால் தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து தர்பூசணி அறுவடை நடக்க இருப்பதால் இன்னும் தர்பூசணியின் விலை வீழ்ச்சி அடையும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.