திண்டிவனம் அருகே தென்களவாய் கிராமத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. தென்களவாய் கிராமத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது.
முகாமை, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி துவக்கி வைத்தார். முகாமில், கால்நடைத்துறை மருத்துவர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர், 400 மாடுகளுக்கு தடுப்பூசி போட்டனர் . ஊராட்சித் தலைவர் ஏழுமலை, வார்டு உறுப்பினர்கள் பரமேஸ்வரி, ஜெயபிரகாஷ், லட்சுமிகாளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.