தமிழ்நாட்டில் 2001’ம் ஆண்டில் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட தயாரிப்பில் தமிழ் மற்றும்’ஹிந்தியில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலைப்புலி எஸ்.தானு தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு மற்றும் வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.
ஆளவந்தான் திரைப்படம் ரீ-ரிலீஸ்:
சமீபத்தில் இதன் தயாரிப்பாளர் எஸ்.தானு ஆளவந்தான் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆளவந்தான் திரைப்படம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது என்ற தகவல்களும் அவ்வப்போது கோலிவுட்டில் பரவி வந்தன. அதன் வரிசையில் ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8’ம் தேதி உலகம் முழுதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே டிஜிட்டல் வெர்ஷனில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா அவர்கள் இயக்க கமல்ஹாசனுடன் பிரவீனா தாண்டன், அனுஹாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலகம் முழுதும் ஆயிரம் திரையரங்குகளில் கமலின் திரைப்படம் வெளியாவதை அடுத்து கமல்ஹாசனின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.